×

சென்னை மெட்ரோ ரயில் மாதாந்திர குலுக்கலில் தேர்வுபெற்ற 30 பயணிகளுக்கு பரிசுகளை வழங்கினார் ராஜேஷ் சதுர்வேதி

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் மாதாந்திர குலுக்கலில் தேர்வுபெற்ற 30 பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. ராஜேஷ் சதுர்வேதி பரிசுகளை வழங்கினார். சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் மற்றும் மார்க் மெட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, ஆறாவது மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மார்க் மெட்ரோ உடன் இணைந்து பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ் சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), இணை பொது மேலாளர் திரு. வி.விஜயவரதன், மார்க்கெட்டிங்) ஆலோசகர் கே.ஏ.மனோகரன் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), மேலாளர்கள் பி. லட்சுமி (வருவாய்) கே.எஸ்.அருண் (இயக்கம்) மற்றும் திரு அல்தாஃப் ஹுசைன், (செயல்பாடுகள்), துணை மேலாளர் ஏ.அருள்ராதா (இயக்கம்). மார்க் மெட்ரோ இயக்குநர் திரு. முரளி மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் பயணிகளை ஊக்குவிக்கவும், பயனளிக்கவும் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிகள் தங்களது பயணத்தை தொடர்ந்து பயணிக்கவும் அடுத்த மாதமும் தொடரும். அடுத்த மாதத்திற்கான குலுக்கல் (21.08.2022) 20.09.2022) 2022 செப்டம்பர் மாதம் இறுதியில் நடத்தப்படும். இந்த பரிசு விவரங்களை மேலும் தெரிந்துகொள்ள அனைத்து மெட்ரோ இரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மார்க் மெட்ரோ உடன் இணைந்து இந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் - திட்ட விவரங்கள்;
1. சென்னை மெட்ரோ இரயிலில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகள்.
2. மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் - மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500/ மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகள், மற்றும்
3. மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் நிறுவனத்தின் பயண சென்னை மெட்ரோ அட்டையை வாங்கி அதில் தொகையான ரூ.500/-க்கு டாப் அப் செய்த 10 பயணிகள்

Tags : Rajesh Chaturvedi ,Chennai Metro Rail , Rajesh Chaturvedi distributed prizes to 30 selected passengers in Chennai Metro Rail monthly draw.
× RELATED போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட...